Pages

Tuesday, August 16, 2016

எம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி

அண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு, இத்தேர்வுக்கு, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்;

இவர்களில், 17 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுக்கு பின், அண்ணா பல்கலையில், தமிழ்நாடு பொது மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. இதற்கு விண்ணப்பித்த, 7,000 பேரில், 6,676 பேர் மட்டும் தகுதி பெற்று, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 4,764 பேர் மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர். 1,687 பேர் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. மற்றவர்கள் இடம் கிடைத்தும் ஒதுக்கீடு பெறாததால், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.