Pages

Tuesday, August 16, 2016

திருவண்ணாமலையில் ஆக.19 முதல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்


திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் இணைந்து ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமை நடத்துகின்றன. திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் 19-ஆம் தேதி காலை இந்த முகாம் தொடங்குகிறது.


இதில், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த தகுதியான பதினேழரை முதல் 23 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.