Pages

Wednesday, August 10, 2016

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு  சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை  அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.
இதற்காக அரசு சார்பில் அனுபவம்வாய்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.