7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்துவதால் ஏற்படும் செலவு ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு நிதித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நடைபெற்றது. தலைமை செயலர் மனோஜ் பரிஜா, நிதித்துறை செயலர் டாக்டர் கந்தவேலு உட்பட நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரி நிதித்துறை செயல்பாடு தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாநிலத்தில் வரிவருவாயை பெருக்க வழிமுறைகளைó குறித்து ஆராய்ந்தோம்.
குறிப்பாக மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களின் தற்போதைய நிலையை ஆராய்ந்தோம்.
கிடப்பில் உள்ள மத்திய அரசு திட்டங்களுக்கு தேவையான ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம். பிற துறைகளில் கட்டாமல் உள்ள வரி நிலுவையை வசூலிக்க முடிவு எடுத்துள்ளோம்.
வரிநிலுவையை வசூலிக்க நடவடிக்கை
குறிப்பாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் ரூ. 100 கோடி வரை வரி கட்டாமல் இருப்பது தொடர்பான வழக்கில் விரைந்து தீர்வு காண திட்டமிட்டுள்ளோம். மேலும் தொழிற்சாலைகள் மின்கட்டண நிலுவைத்தொகையாக வைத்துள்ள ரூ. 30 கோடியை வசூல் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வந்து விடும் என நம்பிக்கை உள்ளது. தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.
இதை அமல்படுத்த புதுச்சேரிக்கான முழு தொகையான ரூ. 500 கோடியை மத்திய அரசே தர வேண்டும் எனக்கோரியுளளோம் என்றார் நாராயணசாமி.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.