Pages

Tuesday, August 16, 2016

குரூப்-4 தேர்வில் பத்தாம் வகுப்பு தகுதி:வயது சலுகை கோரிக்கை

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குரூப்-4 பிரிவில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6ல் எழுத்துதேர்வு நடைபெற உள்ளது. இதில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் தேர்ச்சிபெற்றவர்கள் பொதுப்பிரிவினர் 30ம், எஸ்.சி., எஸ்.டி., 35ம், பி.சி.,எம்.பி.சி., பி.சி.எம்., 32 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பத்தாம்வகுப்புவரை படித்து தேர்வு எழுத ஆர்வம் உள்ள 35வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேர்வு எழுதும் வகையில் வயது வரம்பில் குறைந்தபட்சம் 40வயது வரையாவது உயர்த்தி ஆணை வெளியிடவேண்டும். அதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.