Pages

Monday, August 29, 2016

பட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்

மதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாநில கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வுகள்) அமுதவள்ளி தலைமை வகித்தார்.


மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோஇருதயசாமி முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர்கள் ஆதிராமசுப்பு, அனந்தராமன் ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர்.

இதில், 19 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டது. தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 7, ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில் தலா 6 பேர் என 19 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அறிவியல், கணிதப் பாட ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.