Pages

Wednesday, August 24, 2016

வாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


* மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்கள், அரசு பள்ளி கட்டடங்கள், அரசு உதவிபெறும் மற்றும் பிற பள்ளி கட்ட டங்கள், அரசு கட்டடங்களில், வாக்குச் சாவடி களை அமைக்க வேண்டும். சட்டசபை தேர்த லில், வாக்குச்சாவடியாக பயன்படுத்திய கட்டடங் களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

* மிக பழமையான கட்டடங்களாக அல்லாமல், இயற்கை சேதங்களை தாங்க கூடியதாகவும், பாதுகாப்பாக தேர்தலை நடத்த ஏதுவானதாக வும் இருக்க வேண்டும்
* காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம், விருந்தி னர் விடுதி, வழிபாட்டு தலங்கள், சத்துணவுக்கூடம், மருந்தகம் மற்றும் சத்திரங்கள் போன்ற இடங் களில் வாக்குச்சாவடிகள் அமைக்கக்கூடாது
* கிராமப்புறங்களில், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி; நகர்ப்புறங்களில், 1,200 வாக்காளர் களுக்கு ஒரு வாக்குச்சாவடி; மாநகராட்சிகளில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் அமைக்க வேண்டும்
* அக்., மாதம் மழைக்காலம் என்பதால், வாக்குப் பதிவு மையத்தின் கூரைகள், ஒழுகாமல் பழுது நீக்க வேண்டும். மின்கசிவு ஏற்படாத வகையிலும், மழைநீர் தேங்கி அடைப்பு ஏற்படாத வகையிலும் பராமரிக்க வேண்டும்
* மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு மையங்களில் சரிவுப்பாதைகள் அமைத்து, வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பல உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டு உள்ளன.

பெண்களுக்கான வார்டு ஒரு வாரம் 'கெடு':


-தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், மேயர்,

துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட, 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி பதவிகளில், பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதமாக நடக்கும் இப்பணிகள், இன்னும் நிறைவு பெறவில்லை.

தேர்தல் அறிவிப்புக்கு கால அவகாசம் குறை வாக உள்ள நிலையில், இதனால், மாநில தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடிஏற்பட்டுள்ளது.

எனவே, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணியை, ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித் துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.