Pages

Monday, August 8, 2016

அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம்

புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க குறுகிய கால கடனை 50 ஆயிரமாக உயர்ந்துவது என, முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2528 ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் மத்திய கால கடனாக 8 லட்சம் ரூபாய், குறுகிய காலக்கடனாக 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.


2013-14, மற்றும் 2014-15 ஆண்டுகளுக்கான தணிக்கை நிறைவு பெற்றுள்ள சூழ்நிலையில் சங்கத்தின் 13-வது பேரவை கூட்டம் குயவர்பாளையம் கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது.

கணக்காளர் சரஸ்வதி வரவேற்றார். துணை பதிவாளர் சபரிமலைநாதன் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில், கூட்டுறவு அதிகாரிகள் மணவாளன், கதிரேசன், ராஜசேகரன், சரவணன், கணக்காளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தணிக்கை குறைகள் நிவர்த்தி, இலாப பங்கீடு, பங்கு மூலதனத்தை உயர்த்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

சங்கத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் குறுகிய கால கடனை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரமாக உயர்த்தி வழங்குவது. மாதாந்திர சிக்கன சேமிப்பு தொகையினை 400 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்துவது. சிக்கன சேமிப்பு தொகைக்கு 10.5 சதவீதம் வட்டி வழங்குவது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.