Pages

Thursday, August 4, 2016

புதுக்கோட்டையில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் முந்தைய ஆண்டுகளில் கடைபிடித்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தப்பட்டன. ஆர்பாட்டத்தில் மாவட்ட சட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாலை செந்தில் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட துணை தலைவர் சரவணன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.