Pages

Wednesday, August 17, 2016

கணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்!

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது. எளிமையான வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வினாத்தாள்கள், மிகவும் கடினமாக இருப்பதாக புகார்கள் வந்தன.


இதுகுறித்து, கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது; தனிக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு பரிந்துரைப்படி, வினாத்தாள் மாற்றப்பட்டு உள்ளது.

அதன்படி வரும், 2017ல், பிளஸ் 2 கணித தேர்வுக்கான வினாத்தாள் மாதிரியை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. எளிமையான வினாக்கள், 20 சதவீதம்; சராசரி வினாக்கள், 60 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு, கடின வினாக்கள், 20 சதவீதம் என்ற அளவுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.