Pages

Monday, August 1, 2016

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள் நடைபெற இருக்கிறது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வருகிற 5ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டு பயிற்சி நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வருகிற 5ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை புதுக்கோட்டை லேணாவிலக்கு மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கிறது. பயிற்சியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தொடங்கி வைக்கிறார். இப்பயிற்சியில் முதன்மை பயிற்சியாளராக சென்னை உளவியல் நிபுணா் விஜயலட்சுமி மற்றும் பயிற்சியாளா்களாக வெளிமாவட்டங்களை சோ்ந்த கனவு ஆசிரியரைத்தேடி இயக்குநா் தாமரைக்கண்ணன், புதியாச்சலம், முனிராமையா, தென்கரைமுத்துப்பிள்ளை, நிர்மல்குமார் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு தலைமையாசிரியா்களுக்கு தலைமைப்பண்பு மேம்பாட்டு பயிற்சியினை வழங்க உள்ளனா். மேலும் பயிற்சியில் கருத்தாளா்களாக தலைமையாசிரியா்கள் ஜெயந்தி, சேகா், லட்சுமி ஆகியோரும் செயல்பட உள்ளனா். இப்பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சோ்ந்த 30 தலைமைஆசிரியா்கள் பங்கேற்க உள்ளனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி அவா்களின் வழிகாட்டலின்பேரில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே.ராதிகாராணிபிரசன்னா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பன்னீா்செல்வன், ராஜா ஆகியோர் செய்துவருகிறார்கள். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.