விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். வியாபாரி. இவரது மகள் பாரதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
அவர் அதே பள்ளியில் உள்ள கணக்கு ஆசிரியரிடம் டியூசன் படித்தார். அவருக்கு பாரதி டியூசன் பீஸ் சரியாக கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் கணக்கு ஆசிரியர் கோபமடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் அந்த கணக்கு ஆசிரியரின் பாடவேளை வந்தது. அந்த ஆசிரியர் மாணவி பாரதியை மீண்டும் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் மாணவி பாரதி திடீரென்று பள்ளியின் 2–வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
No comments:
Post a Comment