உலக சுகாதார அமைப்பிடம் போலியோ இல்லாத நாடு என்ற சான்றிதழ் பெற மத்திய சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக 1995 ஆண்டு முதல், நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 2011ம் ஆண்டுக்கு பின் போலியோ பாதிப்பு இல்லாத நிலை உள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பாதிப்பு இல்லாவிட்டால், போலியோ இல்லாத நாடு வரிசையில் இந்தியா இடம் பெற முடியும்.
இதற்கான சான்றிதழை, உலக சுகாதார அமைப்பிடம் இருந்து பெறுவதற்காக இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், அந்தந்த மாநில சுகாதாரத்துறையிடம், போலியோ குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு பெற்று வருகிறது. மேலும் இதை கண்காணிப்பதற்காக, ஐந்து அல்லது ஆறு மாவட்டங்களுக்கு ஒரு டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் அறிக்கையை உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்தாண்டில், போலியோ இல்லாத நாடு என்ற சான்றிதழ் கிடைக்க உள்ளது. இதற்கிடையில், ஜன.,19 ல் நடக்க உள்ள முகாமில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு வீடுகளுக்கு சென்று சொட்டு மருந்து கொடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment