ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
முதல்வர் மாரிமுத்து வரவேற்றார். கல்லூரி செயலாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, ஏ.ஆர். மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர்கள் பாத்திமா சின்னத்துரை, ராசிகா அப்துல்லா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவிகளுக்கு கோலப்போட்டியும், மாணவர்களுக்கு பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போட்டிகளும் நடந்தன. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் இந்து வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் செல்வக்குமாரி வரவேற்றார். தாளாளர் ரித்தீஸ்வரி பிரேமப்பிரியா தலைமை வகித்தார். பள்ளி செயலர் சிங்காரவேல் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் கிங்ஸ் கல்லூரியில், தாளாளர் விமலா தலைமை வகித்தார். முதல்வர் சுந்தரவேல் வரவேற்றார். பாத்திமா தொழிற்பள்ளியில், தாளாளர் முகமது சலாவுதீன் தலைமை வகித்தார். முதல்வர் பூவேந்திரன் வரவேற்றார். ஆசிரியர்கள் சரண்யா, நாகலட்சுமி, சிவபாரதி பங்கேற்றனர்.
பரமக்குடி: கமுதக்குடி கற்பக விநாயகர் பி.எட்., கல்லூரியில், சமத்துவ பொங்கல் மற்றும் "வேட்டி" தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் கே.வி.எஸ். பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் முருகானந்தம், முதல்வர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர். பயிற்சி ஆசிரியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், பாட்டு, கோலப்போட்டி, உறியடி நடத்தப்பட்டன.
கமுதக்குடி மீரா கேட்டரிங் கல்லூரியில் முதல்வர் பிரபு முன்னிலை வகித்தார். முளைப்பாரி, தப்பாட்டம், கிராம பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் குடிசை வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ராஜூ தலைமையில் கொண்டாடப்பட்டது. 1000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்தனர்.
கீழக்கரை: முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி செயலர் என்.எஸ்.ஜேசுதாஸ் தலைமையில் நடந்தது. முதல்வர் பேராசிரியர் ஹேமலதா வரவேற்றார். 2010-2013ல் பல்கலை அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற நான்கு மாணவிகள் உட்பட சாதனை படைத்த 36 மாணவ, மாணவிகளுக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சதாசிவம் பரிசு வழங்கினார்.
பேராசியர்கள், மாணவர்கள் கதர் வேட்டி, பேராசிரியைகள், மாணவிகள் கதர் சேலை அணிந்து வந்திருந்தனர்.
No comments:
Post a Comment