"எய்ம்ஸ்" மருத்துவமனை உட்பட நாட்டின் உயர் மருத்துவ கல்வி, "சூப்பர் ஸ்பெஷாலிட்டி" மருத்துவமனை பணியிடங்களில், மத்திய அரசு விரும்பினால் இடஒதுக்கீடு வழங்கலாம்" என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நிறுவனங்களில், இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அரசியல் சட்ட பெஞ்ச் ஆய்வு செய்ய கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருந்தது. இதுதொடர்பான வழக்கு, நீதிபதி எச்.எல்.டாட்டூ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட "பெஞ்ச்" முன் விசாரணைக்கு வந்தது.
இதில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு விரும்பினால் வழங்கலாம்; இந்த இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், கோர்ட்டிற்கு வந்தால் நாங்கள் முடிவெடுப்போம்" என அதிரடியாக கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment