"குறைந்தபட்சம் 800 ஆசிரியர்கள் அமர்ந்து திருத்துவதற்கு ஏற்ப, விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்வு செய்ய வேண்டும்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுதேர்வு நடைபெற உள்ளது. அதன்பின் விடைத்தாள் திருத்துவதற்காக, அந்தந்த மாவட்டங்களில் கட்டாயம் 5 பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த மையங்களில் கட்டாயம் ஒரே நேரத்தில் 500 முதல் 800 ஆசிரியர்கள் வரை தங்கி பணியில் ஈடுபட வசதியாக மேஜைகள், நாற்காலிகள், ஆசிரியர்களுக்கு, அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த வசதிகள் உள்ள மாவட்ட தலைநகரில் இருந்து 8 கி.மீ., சுற்றளவிற்குள் உள்ளும், அதற்கு வெளியேயும் உள்ள விடைத்தாட்கள் திருத்தும் மையங்கள் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்புமாறு, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விடைத்தாட்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மனம் அமைதியான சூழலில் பணி செய்தால் மட்டுமே, சரியான மதிப்பெண்கள் வழங்க முடியும். இதற்காக, ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு சிக்கல் இல்லாத வகையில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் தேர்வு செய்யப்படுகிறது" என்றார்.
No comments:
Post a Comment