பத்தாம் வகுப்பில் CBSE வாரியத்தின் கீழ், பள்ளிகள் நடத்தும் 10ம் வகுப்பு தேர்வை எழுதி, மேல்நிலைப் படிப்பிற்காக, மாநில வாரியத்தில் மாறிக்கொள்ள நினைக்கும் அசாம் மாநில மாணவர்களின் கவலை நீங்கும் வகையில், அசாம் மாநில மேல்நிலைக் கல்வி கவுன்சிலால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிகளால் நடத்தப்படும் 10ம் வகுப்புத் தேர்வுகளுக்கு, CBSE வழங்கும் சான்றிதழ், மாநில வாரியத்தில் மேல்நிலைப் படிப்பை தொடர்வதற்கு தகுதி வாய்ந்தது.
முந்தைய ஆண்டுகளில், CBSE தேர்வுகளுக்குப் பதிலாக, பள்ளிகள் நடத்தும் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி, அதற்கு CBSE வழங்கும் சான்றிதழைப் பெற்ற மாணவர்கள், சில மாநில வாரிய மேல்நிலைப் பள்ளிகளில் சேர்வதற்கு தடை விதிக்கப்பட்டனர்.
ஆனால், அதற்கான தடையை, அசாம் மாநில மேல்நிலைக் கல்வி கவுன்சில், தற்போது நீக்கியுள்ளது. இதன்மூலம் அம்மாணவர்கள் தங்களின் மேல்நிலைக் கல்வி பாதிக்கப்படுமோ என்று பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment