Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 11, 2014

    டிட்டோஜாக் அமைப்பில் இருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியேற்றம்

    இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கல்லூரி ஆசிரியர் சங்க கட்டடத்தில் டிட்டோஜாக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது, பின்பு அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட போது பிப்ரவரியில் பேரணி மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்ட போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்கனவே எடுத்த தனது நிலைப்பாட்டில் மாறாமல் பிடிவாதம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை குறித்து மற்ற 6 சங்கங்கள் ஆட்சேபம் தெரிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
    இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் மற்ற 6 சங்கங்கள் இணைந்து  பிப்ரவரி 2ஆம் தேதி மாவட்ட அளவில் பேரணி நடத்துவது என்றும், போஸ்டர், துண்டு பிரசுரம் மற்றும் செலவு ஆகியவை அனைத்து சங்கங்களும் ஏற்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து அனைத்து சங்கங்களும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை டிட்டோஜாக் அமைப்பில் இருந்து நீக்கி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகியிடம் கேட்ட போது இன்றைய கூட்டத்தில் நாங்கள் வெளியேறியது உண்மை தான், ஆனால் எங்கள் தரப்பில் பேரணியை கைவிட்டு மறியல் போராட்டம் போன்று அதிரடியாக இறங்கி போராட்டம் நடத்தலாம் என்று அறிவித்ததாகவும், அதில் மற்ற ஏனைய சங்கங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தார். 





    No comments: