சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு - ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த டேவிட் கிபிங் கூறியதாவது:
மற்றொரு சூரிய மண்டலத்தில் 200 ஒளி ஆண்டு தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரகம் பூமியை விட 60 மடங்கு பெரிதானது; இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா"வின் கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "கே.ஓ.ஐ.-314" என பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை 104 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment