Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 1, 2014

    நீர் சிகிச்சை...!

    1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும். 
    2. அடிக்கடி நீரில் முகம் கழுவ மன அழுத்தம் விலகும். புதிய சுறுசுறுப்பு வரும். முகம் கழுவிய பின் துணயால் துடைக்கக்கூடாது. அப்படியே விட வேண்டும்.
    3. ஈரத்துணி பட்டி நெற்றியில் அடிக்கடி போடலாம். அதனால் தலை பாரம், மூளைச்சுடு, மனஉளைச்சல், மனசோர்வு கணிசமாகக் குறையும். புத்துணர்ச்சி தோன்றும். இது உறுதி. வயிற்றிலும் போடலாம். 
    4. காலை மாலை இருநேரம் குளியல் எடுக்கலாம். சாதாக்குளியலை விட ஷவர்பாத், அருவி, மழைக்குளியல் மிக நல்லது. மன அழுத்தம் உடன் சீர்படும். 5. இடுப்புக் குளியல் தொட்டியிலும், முதுகுத் தண்டு தொட்டியிலும், ஜெட் குளியலிலும் தினமும் அல்லது வாரம் இருமுறை குளித்திடலாம். இத்தொட்டிகளை வாங்கி வீடுகளில் அல்லது இயற்கை மருத்துவ முகாம்களில், இயற்கை மருத்துவ மனைகளில் இத்தொட்டிகள் கிடைக்கும். 20 முதல் 30 நிமிடம் குளித்திட வேண்டும். 
    6. கடல் குளியல், குளக் குளியல், நீச்சல் குளியல்கள் அனைத்தும் மன அழுத்தம் சீர்பட எளிய குளியல் முறைகள். 
    7. மன அழுத்தம், மன உளைச்சல், மன குழப்பம், கோபம், சினம், எரிச்சல், மன பொருமல், நிலையற்ற மனம் உள்ளவர்கள் தம்மிடம் எப்போதும் எங்கும் குடிநீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சினம், கோபம் தொடங்கும் சமயமே குடிநீர் குடித்து மட்டுப்படுத்தலாம். குடிதண்ணீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்தும மாயமாக்கும். இது உண்மை. நமது உடலில் அச்சமயம் அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஏற்படும். உருவாகும் அமிலங்களையும் உடம்பில், இரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே நீரை நாம் சிறப்பாக, சரியாக, நன்றாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம். 
    8. மலச்சிக்கல்: பல மணி நேரம் பஸ், ரயில் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் மூலம் மலச்சிக்கல், மலக்கட்டு, மலம் கெட்டிப்படுதல் இறுகுதல் உண்டாகும் சமயம் உடல் இரத்தம் அமிலமாகி, அசுத்தமாகி உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திசுக்கள், காந்தசக்தி தறி கெடும் சமயம் மன அழுத்தம் மாறுபாடு அடைகிறது. வேறுபாடு அடைகிறது. எரிச்சல், கோபம், சினம் உச்சநிலையை எட்டுகிறது. அச்சமயம்.

    1 comment:

    Anonymous said...

    Useful information to all.