மத்திய அரசின் உதவித்தொகைகளைப் பெற நடத்தப்படும் NMMSS என்ற தேர்வில், மொத்தம் 4,231 பீகார் மாநில பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வு கடந்தாண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.
இதன்மூலம், வரும் கல்வியாண்டிலிருந்து ஆண்டிற்கு ரூ.6,000 வருடாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இத்தேர்வில், சுமார் 70% பீகார் மாணவர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தேர்வை, 8ம் வகுப்பு படிக்கும் சுமார் 70,716 பள்ளி மாணவர்கள் எழுதினர். அவர்களில், 3,334 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், 897 பேர் மட்டுமே மாணவிகள். இத்தேர்வில் முதல் மதிப்பெண் 153. இரண்டாம் மதிப்பெண் 146.
No comments:
Post a Comment