"தமிழகத்தில் 2013ம் ஆண்டில் 3.67 லட்சம் பேருக்கு, பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது" என மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 2013ல் பாஸ்போர்ட் கேட்டு, 3.73 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் புதிதாக விண்ணப்பித்தவர்கள் 2.26 லட்சம் பேர். பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்தவர்கள், 1.33 லட்சம் பேர். தட்கல் முறையில், விரைவாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என விண்ணப்பித்தவர்கள் 33,597 பேர்.
இந்த விண்ணப்பங்கள் மீது பாஸ்போர்ட் அலுவலகம் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பாஸ்போர்ட் பெறத் தகுதியுள்ளவர்களை கண்டறிந்து 3.67 லட்சம் பேருக்கு, புதிதாக பாஸ்போர்ட் வழங்கியும், பாஸ்போர்ட்டை புதுப்பித்தும் தந்துள்ளது. பாஸ்போர்ட் வழங்கியதன் மூலம் அரசுக்கு 65 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment