இது மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கான மற்றொரு முயற்சியாகும். தமிழ்நாட்டில் மாதிரிப் பள்ளிகளை தனியாருடனான கூட்டு இல்லாமல், மாநில அரசே நேரடியாக கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத இடங்களில் மாதிரிப் பள்ளிகளை தொடங்க விண்ணப்பம் செய்யுமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு, அதன் மீது முடிவெடுக்கப் போவதாகத் தெரிகிறது. இதில் மாநில அரசு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் மத்திய அரசே நேரடியாக பி.பி.பி. என்ற பெயரில் கல்வியில் தனியார் மயத்தை அனுமதிப்பது தவறான முன்மாதிரியாகிவிடும். இந்தப் பிரச்சினையில் தனியாருக்கு பள்ளி நடத்த இடம் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியை மாத்திரம் மாநில அரசுகள் கவனிக்கலாமாம். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment