தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் துணைத் தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தனசேகரன் வரவேற்றார். நிர்வாகிகள் புஷ்பராஜ், சரவணன், துரைசாமி, சின்னுசாமி, நாகராஜன், குன்னிமரத்தான், வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அண்ணாமலை, செயலாளர் நடேசன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆறாவது ஊதியக்குழு, ஒரு நபர் குழு, மூன்று நபர் குழு என அனைத்திலும் குளறுபடி உள்ளது. ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியும் குழப்பம் நீங்கவில்லை. மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்கள் வழங்கும் சம்பளத்தைவிட, மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் குறைவாகவே வழங்குகிறது. இந்த முரண்பாட்டை களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட பொருளாளர் சேகர், ஒன்றிய, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment