Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 12, 2013

    அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்புடன் நிறுத்தம் - நாளிதழ் செய்தி

    தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    தமிழக அரசு, கடந்த சட்ட மன்ற கூட்ட தொடரில், 50 அரசு நடுநிலை பள்ளிகளை, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தது. நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், இதுகுறித்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை.

    இனிமேல், உயர்நிலை பள்ளியாக மாற்றி அறிவித்தாலும், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நியமித்தல், அப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் மீண்டும் அழைத்து வருதல் என்பது நடக்காத காரியங்கள். அரசின் அறிவிப்பு, வெறும் கண்துடைப்பானதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஆனால், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக உயர்த்தப்படும் என, அரசு அறிவித்தது மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    1 comment:

    Unknown said...

    if the middle school upgraded as high school,simultaneously primary as middle should upgrade in the same number.then only it will be balanced.