அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை வளர்ச்சிக்குழு சிறப்பு கூட்டம் நாளை (15ம் தேதி) நடத்தப்பட வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழரசு உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருமான தமிழரசு கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் செயல்முறைப்படி, தஞ்சை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு சிறப்புக்கூட்டம் சுதந்திர தினமான நாளை (15ம் தேதி) நடத்தப்பட வேண்டும்.
அதன் தலைவரான பள்ளி தலைமையாசிரியர் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில், குழு உறுப்பினர்களான 9ம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புகளுக்கான உதவி தலைமையாசிரியர், உள்ளாட்சி வார்டு உறுப்பினர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆகியோர் பங்கேற்கும் வகையில், குழு தலைவர் தெரியபடுத்த வேண்டும்.
கூட்டத்தை நடத்தி, நடவடிக்கை குறித்து உரிய பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பில் நடத்தப்படும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment