Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 22, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு: சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது

    ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும்  அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப்பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள்மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து,விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிருநாளில் தொடங்கப்பட உள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக்கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர் தகுதித்தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு:
    விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு,தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.அதன் பிறகு, இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2 வாரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு:
    முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில்வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை1.60 லட்சம்பேர் எழுதினர்.முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள்,அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும்எனத் தெரிகிறது.இது தொடர்பாக, முடிவுசெய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

    உதவிப் பேராசிரியர் நியமனம்:
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,நேர்முகத்தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.

    தேர்வர்கள் ஏமாற வேண்டாம்:

    ஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையானமுறையில், தகுதியின் அடிப்படையில்மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான முறைகளில் இந்த நியமனத்தைப்பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதாகவும், மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள் தமிழகம் முழுவதும் தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள் தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தேர்வர்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தருமபுரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும் நேர்மையாகவும்,வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    4 comments:

    Dinesh Xavier said...

    shall we expect re-exam for tet? because of question paper problem in dharmapuri.Police found out that nearly 120 questions matched with the question paper.

    Anonymous said...

    pls say SATHISH SIR when TNTET 2013 key sir

    Unknown said...

    not re-exam

    IDAINILAI ASIRIYAR said...

    No that's not possible. Because there is no evidence of question-out. If any hard copies of question caught only reexamination possible. Otherwise nothing.