ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து, தீர்வு காண அமைக்கப்பட்ட, ஒரு நபர் குழு பரிந்துரையின் பேரில், 30க்கும் மேற்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஊதிய விகிதத்தில், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதிய மாற்றமோ, தர ஊதிய மாற்றமோ, பரிசீலனை செய்யப்படாதது, ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர், பணியாளர் காலியிடங்களை, உடனே நிரப்ப வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்டப் போராட்டங்களை நடத்த, தமிழக ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 7ம் தேதி, மாலை 5:30 மணிக்கு, வட்டாரத் தலைநகர்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்; 14ம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், மூன்றாவது கட்டமாக, ஆசிரியர் சங்கங் களை ஒருங்கிணைத்து, பெரிய அளவில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என, தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment