Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 20, 2013

    வேலை தேடும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்!

    இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான்.

    ஏனெனில், அந்த காலகட்டத்தில் வேலைகள் ஏராளமாக இருந்தன மற்றும் அதற்கான தகுதியான நபர்கள் மிகவும் குறைவு என்பது இவர்களின் எண்ணம். அந்த காலகட்டத்தில், வேலையைப் பெறுவதற்கான போட்டி, ஒரு நடைப் பயிற்சி போட்டியைப் போல்தான் இருந்தது. அதற்கு பிறகான நாட்களில், அந்த போட்டி ஒரு ஓட்டப் பந்தயமாக உருவெடுத்தது. ஆனால், அது இன்று, தடைகளைத் தாண்டி ஓடக்கூடிய ஒரு கடினமான போட்டியாக பரிணாமம் அடைந்துள்ளது.

    மேலும், அன்றைய நாட்களில், பணிகளைத் தேடுவதென்பது, ஒருவரின் சொந்த மாவட்டம், மாநிலம் அல்லது அதிகபட்சமாக ஒரு நாட்டின் எல்லை என்ற அளவில் இருந்தது. ஆனால், இன்றைய தாராளமய பொருளாதார நிலை வேறு. உலகம் முழுவதும் வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்புகளும், வசதிகளும் பெருகியுள்ளன. தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கான உலகம் திறந்துவிடப்பட்டுள்ளது.

    வேலை தேடும் செயல்பாட்டில் வெற்றியடைவதற்கான சில தாரக மந்திரங்கள்

    உங்களின் கல்லூரி Placement cell மற்றும் Alumni associations

    உங்கள் கல்லூரியின் placement cell -ஐ எந்த சமயத்திலும் இளக்காரமாக நினைத்துவிட வேண்டாம். அதேசமயத்தில், அவர்களே உங்களுக்கு, உங்களின் பெற்றோர் செய்வதுபோன்று பார்த்து பார்த்து செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. ஏனெனில், உங்களைப் போன்று அவர்கள் பல பேருக்கு உதவ வேண்டும்.

    Placement cell -ன் அலுவலர்களை சந்தித்து, வேலைவாய்ப்புகள் பற்றி கேட்டறிந்து, உங்களின் விருப்பம் மற்றும் பணி தேர்வு குறித்து பேச வேண்டும்.

    பல கல்லூரிகளில், பழைய மாணவர் சங்கம், நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். சில புகழ்மிக்க கல்லூரிகளில், பழைய மாணவர் சங்கங்கள், வெள்ளி விழா, பொன் விழா மற்றும் வைர விழா போன்றவையும் கொண்டாடுவதுண்டு. அதுபோன்ற கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும், பல மாணவர்களை, அவர்களின் alma mater -இலிருந்து எடுத்துக்கொள்கின்றன. அதேசமயம், ஒரு கல்லூரியில் தேர்ச்சி பெற்று வெளியே சென்ற பிறகுதான், ஒருவர் பழைய மாணவராக ஆக முடியும் என்பதை மறக்கக்கூடாது.

    நீங்கள், பழைய மாணவர் சங்கத்திடம், பழைய மாணவர் பற்றிய பட்டியல் கேட்டு, அவர்களிடம் தொடர்பு கொள்ள முயலலாம். இதன்மூலம், உங்களின் ஆர்வத்தை அவர்கள் புரிந்துகொண்டு, அதனால் ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு உதவ நினைக்கலாம். ஆனால், placement cell மற்றும் alumni association ஆகிய இரண்டு அம்சங்கள் மட்டுமே, உங்களுக்கான வேலை வாயப்புகளை 100% உறுதிசெய்துவிடும் என்று நினைக்கக்கூடாது.

    உங்களின் ஆற்றல், திறமை மற்றும் நடைமுறை அறிவு போன்றவையே, இறுதி முடிவுகளைத் தரும் ஆற்றல் பெற்றவை என்பதை மறத்தலாகாது.

    தொழில் நிபுணர்களின் சங்கம்

    உங்களின் தொழில்துறை என்னவாக இருந்தாலும், அவற்றுக்கான தனி சங்கங்கள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியாளர் என்று வைத்துக் கொண்டால், பொறியாளர் சங்கம் உண்டு. இதுதவிர, computer society of India, society of automotive engineers, institute of electrical & electronics engineers, institute of electronics & telecommunication engineers போன்ற பல்வகையான தொழில்துறை சங்கங்கள் உண்டு. மேலாண்மை படிப்பை எடுத்துக்கொண்டால், அகில இந்திய மேலாண்மை சங்கம் மற்றும் பல உள்ளூர் சங்கங்களும் உண்டு.

    ஆசிரியர் தொழிலை எடுத்துக்கொண்டால், Indian society for technical education என்ற அமைப்பும், பயிற்சியளிக்கும் தொழில் துறைக்கும் Indian society for training and development என்ற அமைப்பும் உண்டு. மேலும், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் மற்றும் நிதி துறைகளுக்கென்று தனியான அமைப்புகளும் உண்டு.

    இத்தகைய அனைத்து சங்கங்களும், தங்கள் துறை சார்ந்த செமினார்கள், வொர்க்ஷாப், மாநாடுகள் ஆகியவற்றை தங்களுக்கு பொருத்தமான ஏதேனும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் நடத்துகின்றன. மேலும், குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறை கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. எனவே, இதுபோன்ற அமைப்புகளில் உறுப்பினராகி, பொதுவாக மாதந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் லெக்சர் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது நன்மை பயக்கும்.

    உங்களின் துறையில் அனுபவமிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களை சந்தித்து உரையாடுகையில், அவர்களிடமிருந்து, எந்தளவு விஷயங்களை வாங்க முடியுமோ, அந்தளவிற்கு வாங்கிவிட வேண்டும். மேலும், இந்த அமைப்புகளின் மூலமாக, பல நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்களின், ஏன், அந்த நிறுவன முதலாளியின் அறிமுகம்கூட கிடைக்கும். உங்கள் இருபது வயதுகளின் இறுதி கட்டத்தில் அல்லது முப்பது வயதுகளின் முதல் கட்டத்தில், ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து, உங்களின் திறமையை நிரூபிக்கலாம்.

    விண்ணப்பித்தல் மற்றும் நேரடியாக தொடர்பு கொள்ளல்

    வேலை பெறுதல் தொடர்பாக இருவிதமான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். வாய் மொழியின் மூலமாக, நிறுவனங்கள் பற்றியும், காலகிரமமாக, அவற்றில் நிரப்பப்படும் பணியிடங்கள் பற்றியும் அறியலாம். இன்னொரு வகை என்னவெனில், நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பது. இதுபோன்று விண்ணப்பித்து அவற்றுக்கு நீங்கள் பதிலை பெற்றுவிட்டால், உங்களுக்கு வாய்ப்பு அதிகம் என்று அர்த்தம்.

    எலக்ட்ரானிக் மீடியாவின் பயன்பாடு

    இன்றைய உலகில், பணி தேடும் செயல்பாட்டில், எலக்ட்ரானிக் மீடியாக்களின் பங்கு அதிகம். குறைந்தபட்சம் உங்களிடம் ஒரு E-Mail கூட இல்லையெனில், வேலைக்கான போட்டியில் நீங்கள் வெற்றி பெறுவது கடினம். அந்த வசதியைக்கூட பெறாதவரை, நிறுவனங்கள் ஒரு பொருட்டாக மதிக்காது.

    ஒருவர் எந்த துறையாக இருந்தாலும், குறைந்தபட்ச கணிப்பொறி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறியை ஆன் செய்து இயக்குவது எப்படி, word போன்ற சில அடிப்படை டாகுமென்டுகளை திறப்பது எப்படி, இன்டர்நெட்டில் தேடுவது எப்படி உள்ளிட்ட சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கற்றுக்கொள்வது மிகவும் எளிமையான மற்றும் செலவில்லாத விஷயம் என்பதையும் நினைவில் கொள்க.

    ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரம், இணையத்தில் வேலை தேடுவதற்கு செலவழித்தல் வேண்டும். இணைத்தின் மூலம் பல்வேறான நிறுவனங்களின் விபரங்கள் மற்றும் அவற்றில் காலியாக உள்ள பணி விபரங்கள் ஆகியவற்றை அறியலாம். மேலும், உங்களின் சிறப்பு படிப்புக்கேற்ற சிறந்த வலைதளங்களைப் பற்றிய தகவல்களை நிபுணர்களிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும், பணி தேடுதலில் கன்சல்டன்டுகளில் உதவியை நாடுகையில், சில புகழ்பெற்ற கன்சல்டன்டுகள், அதற்கான கட்டணத்தையும் வசூலிக்கலாம். அதேசமயம், கட்டணத்திற்காக யோசிக்காமல், உங்களின் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ற சிறப்பான பணி வாய்ப்புகளை, அதுபோன்ற புகழ்பெற்ற கன்சல்டன்சிகள் ஏற்பாடு செய்து கொடுத்தால், நீங்கள் அவற்றின் உதவியைப் பெறுவதே சிறந்தது.

    உங்களின் வட்டத்தை பெரிதாக்குக...

    ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 60%க்கும் மேற்பட்ட பணிகள், விளம்பரங்கள் மூலமோ அல்லது கன்சல்டன்சிகள் மூலமாகவோ நிரப்பப்படுவதில்லை. வெறும் வாய்மொழியின் மூலமாக, தற்போது தங்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மூலமாகவே ஏராளமான பணியிடங்கள் நிரம்புகின்றன.

    தங்களின் தற்போதைய பணியாட்களின் தெரிந்த வட்டங்களில் யாரேனும் குறிப்பிட்ட பணி வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றால், அவர்களின் ரெஸ்யூம்களை, தற்போதைய ஊழியர்களின் மூலமாக பெற்றுக்கொள்ளும். ஆனால், ரெஸ்யூம் கொடுத்துவிட்டாலே உடனே, நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்துவிடும் என்று நினைத்தல் கூடாது.

    ஒருவரின் தகுதி, அனுபவம் மற்றும் முந்தைய சாதனைகள் போன்றவை, காலியாக இருக்கும் பணியிடத்திற்கு பொருந்துமா உள்ளிட்ட பல்வேறான விஷயங்கள் விரிவாக அலசப்படும். உங்களைப் பற்றிய ஒரு திருப்தியான மனோநிலை ஏற்பட்டால், உங்களுக்கான அழைப்பு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து வரும். அதன்பிறகு, எழுத்துத்தேர்வு, குழு கலந்தாய்வு போன்ற விஷயங்களில் நீங்கள் ஈடுபடுத்தப்படலாம்.

    ஆனால், இதுபோன்ற முறைகளில் நீங்கள் தேர்வு பெற்றுவிட்டால், பொதுவாக, நீங்கள் கேட்கும் சம்பளம் கிடைக்கும். எனவே, முடிந்தளவு உங்களின் வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடன் பள்ளி மேல்நிலை மற்றும் கல்லூரி படித்த நண்பர்கள், நீங்கள் பணிபுரிந்த இடங்களில் உடன் வேலை பார்த்தவர்கள் ஆகியோருடன், முடிந்தளவு, உங்களின் தொடர்புகளை நீர்த்துப் போகாமல் வைத்திருங்கள். இதனால், ஏதாவது ஒரு நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும்.

    வேலை வாய்ப்பு கண்காட்சிகள்

    முன்பெல்லாம், ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துவிட்டு, அங்கேயிருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பினை பெறவே பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வானால், பணி உத்தரவு ஆணையை வாங்க அடுத்த சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.

    இது விரைவான காலம். அனைத்துமே உடனடியாக தயாராகும் காலம். நிறுவனங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. அதேபோல், அந்நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பணிபுரியும் ஆட்களும், அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு நாளும், புதிதுபுதிதான ஆட்களை நிறுவனங்கள் தேடுகின்றன.

    வேலைக் கண்காட்சி(job fair) என்பது இன்றைய உலகின் ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது. அதாவது, தங்களிடையே பணி வாய்ப்புகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் அனைத்தும், ஒரே வளாகத்தில் வந்து, ஸ்டால் அமைத்து தங்களிடமிருக்கும் வாய்ப்புகளை பொதுமக்களுக்கு தெரிவிப்பார்கள். இதுபோன்ற job fair -களில் கலந்துகொள்வதன் மூலமாக, நாம் பெரிய நன்மைகளை அடையலாம்.

    Job fair -களில் கலந்துகொள்ளும் புதிய பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்

    * நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனையுடன் செல்ல வேண்டும்.

    * பல நல்ல நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கு, இந்த கண்காட்சி ஒரு அருமையான வாய்ப்பாகும்.

    * உங்களின் சிறப்பான துறை அறிவு மற்றும் நல்ல மொழிவளம் ஆகியவற்றை நீங்கள் வெளிப்படுத்தினால், எளிதாக சிறந்த பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.

    * அதிக எண்ணிக்கையிலான ரெஸ்யூம்களை கையில் வைத்துக்கொள்ளவும். (original print outs not xerox copies)

    * மேலும், அதிக எண்ணிக்கையில் பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவிலான போட்டோக்களை வைத்துக் கொள்ளவும்.

    * உங்களின் சிறப்பான முன் தயாரிப்பு, நிறுவனங்களை எளிதில் கவரும் வகையில் அமைதல் வேண்டும்.

    * நிறுவன ஆட்கள், உங்களிடம் சில நிமிடங்களே பேசினாலும்கூட, அவர்கள் உங்களை மதிப்பிட்டு விடுவார்கள் என்பதை நினைவில் கொள்க.

    * ஆரம்ப மணித் துளிகளில், அவர்களை நீங்கள் கவர்ந்துவிட்டால், உங்களிடம் இன்னும் அதிகநேரம் செலவழிக்க அவர்கள் விரும்புவர்.

    * Job fairs செல்லும் முன்பாக, சிறந்த தெளிவான ரெஸ்யூம் தயாரிப்பில் ஈடுபட வேண்டும். தேவையான எந்த விஷயமும் அதில் விடுபட்டிருக்கக் கூடாது. இதன்மூலம், உங்களை நீங்கள் எளிதாக, நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த முடியும் மற்றும் நேர்முகத் தேர்வும் எளிதாக அமையும்.

    * மேலும், இந்த job fair -களில், எந்த கட்டணமும், உங்களிடமிருந்து வசூலிக்கப்படுவதில்லை. ஏனெனில், இவை பல நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படுகின்றன.

    No comments: