Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 12, 2013

    ஆசிரியர் கூட்டணியினர் போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டம்

    7அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளதாக உலக கல்வி அமைப்பின் துணைத் தலைவரும், அகில இந்திய பொதுச் செயலருமான சு. ஈசுவரன் தெரிவித்தார்.

    சிவகங்கையில் சனிக்கிழமை மாலை, ஆசிரியர் கூட்டணியின் தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு 6-ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியம் போல் தமிழ்நாடு அரசும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

    இந்த ஊதியக் குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் 1.1.2006 ஆம் தேதி முதல் வழங்க வேண்டும். ஏற்கனவே 2 ஆண்டுகள் கல்வியியல் கல்வி கற்று ஆசிரியராகத் தேர்வு பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு என்பது தேவையற்றது. எனவே ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும், பகுதிநேர தொழில்கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்படும்.

    பின்னர் நடைபெற்ற தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் எஸ். அந்தோணிசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் (ஓய்வு பிரிவு) என். முத்தையா முன்னிலை வகித்தார். தொடர் மறியல் குறித்து கூட்டணியின் மாநில பொருளாளர் மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலர் அ. ஜோசப் சேவியர், இயக்கப் புரவலர் எஸ். பொன்ராஜ், மாநிலத் தலைவர் கோ. காமராஜ், பொதுச் செயலர் ந. ரெங்கராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

    முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் அ. பாண்டியராஜன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கு. அருளானந்து நன்றி கூறினார்.

    1 comment:

    sun said...

    vazha vazha kozha kozha korikkaikal.sila korikkaikal niraiveraathu enru therinthum athai solkiraarkal.central govt s.g.teacherkkaana grade pay vendum enpathai mattume korikkaiyaaka vaiththu valuvaaka poraadungal.