அசாம் கலவரத்தை அடுத்து வடமாநில மக்கள் தாக்கப்படுவதாக எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ்கள் வாயிலாக புரளி பரவியைதை அடுத்து தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடமாநில மக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.
இதையடுத்து அனைத்த செல்போன்களில் இருந்தும் தொகுப்பு எஸ்எம்எஸ்கள் அனுப்ப மத்திய அரசு தடை விதித்திருந்தது. ஒரு நாளைக்கு 20 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்ப முடியாத சூழ்நிலை இருந்தது.
இந்த நிலையில், இன்றுடன் தொகுப்பு எஸ்எம்எஸ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
எஸ்எம்எஸ்களுக்கான தடையால், பொதுமக்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment