Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 31, 2012

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சிறப்பு தேர்வுக்கு இனி ஆன்-லைன் விண்ணப்பம்

    சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் ஆன்-லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர்.
    இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, கருவூலத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு துறைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிப்பு வெளியாகும் போது, மாணவர்களுக்கு அலைச்சலும், சிரமமும் ஏற்பட்டது.

    எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு ஆன்-லைனில் விண்ணப்பிப்பது போன்று, நடப்பு கல்வி ஆண்டு முதல், சிறப்பு தேர்வு, மதிப்பெண்கள் மறு கூட்டல், அக்டோபரில் நடைபெறும் சிறப்பு தேர்வு ஆகியவற்றிற்கு, இனிமேல் ஆன்-லைன் மூலம் தான், விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    No comments: