Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 8, 2012

    அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும்: தமிழக அரசு

    தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை தமிழக அரசால் அமைக்க்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்து அறிவித்தது. இதனை எதிர்த்து சில சி.பி.எஸ்.இ.
    பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. சி.பி.எஸ்.இ. வாரியத்தின் அங்கீகாரம் பெற்று செயல்படும் தங்கள் பள்ளிகளை தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணய உத்தரவு கட்டுப்படுத்தாது என்று அவர்கள் தங்கள் மனுக்களில் கூறியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி. சஞ்சய் காந்தி அண்மையில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், சி.பி.எஸ்.இ. வாரியம் என்பது தேர்வுகளை நடத்துவதற்கான ஓர் அமைப்பு மட்டுமே. கல்விக் கட்டண விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. தலையிட முடியாது. பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் தொடர்பாக மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளின்படியே பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    No comments: