JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Sunday, April 8, 2012
2011 - 12 கல்வியாண்டு அனைத்துவகை பள்ளிகளிலும் பள்ளி ஆண்டுவிழா கொண்டாட இயக்குனர் உத்தரவு.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 7306 / J3 / 2012, நாள். 28.03.2012.
2011 - 12 கல்வியாண்டு நிறைவுபெற உள்ளது. இந்நிலையில் இக்கல்வியாண்டில் பள்ளிகளில் மாணவர்களின் பல்வேறுவிதமான திறன் வெளிப்படும் வகையில் சிறப்பான செயல்பாடுகள் நடைபெற்றிருக்கக்கூடும். அதேபோன்று பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல சாதனைகள் படைத்திருப்பர். இவை அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக சமுத்தாயத்திற்கு தெரிவிக்கப்படுவதற்கு ஒருவாய்ப்பாக பள்ளி ஆண்டுவிழா அமையவேண்டும்.
அனைத்து மாணவ / மாணவியர்களிடையே தங்கள் திறமையை வளர்க்க பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தகுதிப்பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கியும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ / மாணவியர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கியும் எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் வண்ணம் பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாடுமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment