Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 25, 2012

    டிஇடி : சமூக அறிவியல் வினா-விடை தொகுப்பு 3.

    தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
    1. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்
    2. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்
    3. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்
    4. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் - தொட்டப்பெட்டா
    5. தமிழ்நாட்டின் கடற்கரை நீள ஏறக்குறைய - 1000 கிமீ.
     
    6. தமிழ்நாட்டின் பெரும்பானமை  மொழி - தமிழ்
    7. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர், சூட்டப்ட்ட நாள் - 14.01.1968
    8.யாருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது - டாக்டர் ராதாகிருஷ்ணன்
    9. யாருடைய பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது - ஜவகர்லால் நேரு
    10. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு - 1956
    11. புவி தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் - கேலார்ட் நெல்சன்.
    12. மகாத்மாக காந்தியடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 2, 1869
    13. தைத்திங்கள் முதல் நாள் - பொங்கல்.
    14. திருவோணம் கொண்டாடப்படும் மாநிலம் - கேரளா
    15. கதக்களி நடனம் ஆடப்படும் மாநிலம் - கேரளா
    16. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் - ஏப்ரல் 1, 2010
    17.ஆகாய விமானம் கண்டுபிடித்தவர் - ரைட் சகோதரர்கள்
    18. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை அல்லது கடைகளில் பணியமர்த்தக் கூடாது.
    19. ஆண்டிஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - தென்அமெரிக்கா
    20. ஆல்ப்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா
    21. ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம்  - வட அமெரிக்கா
    22. கிளிமஞ்சாரோ அமைந்துள்ள கண்டம் - ஆப்ரிக்கா
    23. இந்தியாவில் அமைந்துள்ள பீடபூமி - திபெத் பீடபூமி
    24. கிழக்கு ஆசியாவில் காணப்படும் பீடபூமி - திபெத் பீடபூமி
    25. வட அமெரிக்காவில் உள்ள பீடபூமி - கொலராடோ பீடபூமி
    26. சிந்து கங்கை சமவெளி காணப்படும் இடம் - இந்தியா
    27. லியானாஸ் சமவெளி காணப்படும் இடம் - தென்அமெரிக்கா
    28. லிம்பார்டி சமவெளி காணப்படும் இடம் - ஐரோப்பா
    29. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்புகள் - சமவெளி
    30. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்
    31. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு
    32. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை
    33. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்
    34. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்
    35. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை
    36. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180
    37. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்
    38. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி
    39. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360
    40. மெரிடியன் என்று அழைக்கப்படுவது - தீர்க்க ரேகைகள்
    41. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.
    42. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.
    43. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா
    44. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.
    45. தீபகற்பம் என்படுது  - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.
    46. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில்  - மூன்றில் ஒரு பங்கு
    47. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்
    48. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5
    49. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்
    50. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா
    ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை1
    ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை2
    தமிழ் வினா விடை மாதிரித்தாள்குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்

    No comments: