Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, October 5, 2014

    நடப்பாண்டிலே ஆங்கில வழிக் கல்வி பணியிடத்தை நிரப்புங்கள்; இடைநிலை ஆசிரியரின் ஏக்கம்....

    தொடக்கப்பள்ளி ஆங்கில வழிக்கல்வி காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா??

    நமக்கு ஏற்கனவே அறிவித்த தகவல்கள்:

    1.Backlog Vacancy:845
    இதில் BC, MBC க்கு மட்டும் ஒதுக்கப்பட்ட இடங்களில் 100% ஐயும்
    மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி உள்ளனர்.

    2.Current Year Vacancy:
    830 மட்டுமே.

    3.Hindu-Piramalai Kallar-64 Vacancy.
    4.ADW School: 669 Vacancy.


    * தற்போது நிரப்பப்பட்டவை வெறும் 1675 மட்டுமே..
    *தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற SGT :32000 பேர்.
    *பணிக்கு தேர்வு பெற்ற அறிவாளிகள்:1675 பேர்.
    *Govt.English medium vaccancy: ??????????????

    *SGT 2013-14 vaccancy:????????????????????????

    *SGT to BT promotion vaccancy:?????????..

    (*)  கடந்த சட்டசபை கூட்ட தொடரில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் 1,35,000 மாணவர்கள் தமிழக அரசின் புது முயற்சியான ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என பெருமிதமாக கூறினார்.

    (*) நடப்பு முறையான 30:1 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று பார்த்தால் கூட 4500 புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர்கள் பணியை வழங்கி இருக்கலாம்.

    (*) தகுதித்தேர்வு மூலமாக இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்தும், கடுமையான வெயிட்டேஜ் (GO:71)மூலமாக அவர்களை தெரிவு செய்து பார்த்த கல்வித்துறையானது, அதையும் தாண்டி பயணித்த  தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்தும், அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்காமல் "செயற்கை பற்றாக்குறை"யை ஏற்படுத்தி இருப்பது தொடக்கப்பள்ளி ஆசிரியர்-மாணவர்கள் மத்தியில் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது....

    (*) தரமான பொருட்கள் எங்கு கிடைக்கின்றதோ, அதை நாடி சென்று வாங்குவது தான் உலகவழக்கு.
    தனியார் ஆங்கில தொடக்கப்பள்ளியில் பாட வாரியாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு நாளில் குறைந்தபட்சம் நான்கு, ஐந்து ஆசிரியர்கள் போதிக்கும் பாடங்களையும், பாடல்களையும், கருத்துக்களையும் உள்வாங்குகின்றான்..

    ஆனால் அரசு தொடக்கப்பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள் தான்.
    என்றைக்காவது ஒரு நாள் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்தாலோ, கலந்தாய்வு கூட்டம் சென்றாலோ அவ்வளவு தான்.அந்த ஐந்து வகுப்பிற்கும் தசாவதானி வேடம்புரிந்து அனைத்து குழந்தைகளுக்கும் கற்பிக்கும் நிலை, நம் ஆசிரியருக்கு......???

    (*) அரசின் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக்கு teachers association மூலமாக ஆசிரியர்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒதுக்காமல், தகுதித்தேர்வில் தேர்வான இடைநிலை ஆசிரியர்களை கொண்டு பணிநியமனம் செய்து பாருங்கள்...!!!!
    செய்யவில்லையே, காரணம்:
    அடுத்த கல்வி ஆண்டிற்குள் நிச்சயம் 1000 தொடக்கப்பள்ளிகள் மூடப்படும்.

    தற்போது போதுமான அளவு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்தால் அடுத்த கல்வியாண்டிற்குள் குறைந்தபட்சம் 2000 ஆசிரியர்களுக்காவது ஆசிரியர் பணி புரியாமலேயே சம்பளம் பெறும் நிலை வரலாம் என்ற எண்ணம் தானே.
    அருமையான தொலைநோக்கு பார்வை....????
    (*) என்ன பாவம் புரிந்தார்களோ; தெரியவில்லை, இந்த இடைநிலை ஆசிரியர்கள் மட்டும்.
    * வெயிட்டேஜ்(GO71) என்ற கொடுமைக்காரனுக்கு எதிராக பட்டதாரி ஆசிரியர்கள் ஒருமித்த கருத்துக்களோடு போராடிய போது இடைநிலை ஆசிரியர்கள் ஒதுங்கி நின்றதற்கு காரணம் GO 71என்ற அரக்கனை விட மாபெரும் அரக்கனாய் நின்றது குறைவான காலிப்பணியிட அறிவிப்பே...
    *கூடுதலாக இடைநிலை ஆசிரியர்களுக்கு காலிபணியிட அறிவிப்பு வெளிவர வேண்டும்.
    *அப்போது மட்டுமே தமிழகத்தில் தொடக்கக்கல்வியின் தரம் உயரும்.
    *மாணவர்கர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும்.
    *தமிழ்மொழித்திறன் பெருகும்.
    *ஆங்கில உச்சரிப்பு மலரும்.
    *மாணவர்களின் கல்வித்தரம்  ஓங்கும்
    இப்படிக்கு
    சத்தியமூர்த்தி

    No comments: