மனிதர்கள் மட்டுமல்லாமல், ரோபோவும், பணிச்சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஆஸ்திரிய நாட்டில் நடந்துள்ளது.
ஐரோப்பிய நாடான, ஆஸ்திரியாவின், ஒரு நகரில், வீட்டை சுத்தப்படுத்தும் பணியில், ரோபோ ஈடுபட்டிருந்தது. சமீபகாலமாக அந்த ரோபோ, சோர்வடைந்த நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக, அந்த வீட்டு உரிமையாளர், இந்த ரோபோவை, "சுவிட்ச் ஆப்" செய்து வைத்திருந்தார்.
தொடர் பணிச்சுமையின் தூண்டுதலால், இந்த ரோபோ, தானாக, சமையலறைக்குச் சென்று, அடுப்பை மூட்டி, அதில் குதித்து, தீயில் எரிந்து, தற்கொலை செய்து கொண்டுள்ளது. ரோபோவின் தற்கொலையால், கட்டடம் முழுவதும் புகை பரவியதால், அங்கு வசித்தவர்கள் அனைவரும் காலி செய்து வெளியேறினர்.
"ரோபோ, தனக்குத் தானே, "ரீ ஆக்டிவேட்" செய்து, தீயில் குதித்திருக்கலாம்" என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment