டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448
பேருக்கு, இன்றும், நாளையும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நான்கு இடங்களில், சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்கிறது.
டி.இ.டி.,
இரண்டாம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 1,735 பேருக்கு இன்றும்; முதல்
தாளில் தேர்ச்சி பெற்ற, 713 பேருக்கு நாளையும், சான்றிதழ் சரிபார்ப்பு
நடக்கும். 12ம் தேதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த
தகவல்களை, சம்பந்தப்பட்ட மையங்களில் இருந்து, சென்னைக்கு கொண்டு வந்து,
அதன்பின் இறுதிக்கட்டப் பணிகளை செய்து, பட்டியலை வெளியிடுவர்.
இந்த முறை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்
மையங்களில் இருந்தே, தேர்வர் குறித்த விவரங்களை, டி.ஆர்.பி., இணைய தளத்தில்
உடனுக்குடன் சேர்க்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில்
பணி வழங்கப்படும்.
No comments:
Post a Comment