ஆசிரியர் நியமனத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு செய்யும் உரிமை மட்டுமே உண்டு. தகுதித் தேர்வு நடத்த சட்டப்பூர்வமான உரிமை அதற்கு இல்லை என முன்னாள் மேலவை உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநில கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து கட்டாய இலவசக்கல்வி சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. ஆசிரியர்களுக்கு பருவந்தோறும் அல்லது ஆண்டு தோறும் மாறி வரும் பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி வகுப்புகளை நடத்துவதுதான் பலன் தருமே ஒழிய, தகுதித் தேர்வுகளால் நிச்சயம் பலன் ஏற்படாது. மத்தியஅரசு சட்டத்தின்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மட்டுமே, ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்த முறையான அமைப்பாகும்.
மத்தியஅரசு சட்டத்தின்படி ஆசிரியர் கல்வி நிறுவனமும், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமே உரிமை பெற்றவை. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தனியே அரசுப் போக்குவரத்துக்கழகம் தொடங்கி மாணவர்களுக்காக தனி பேருந்து, மற்றும் வேன் வசதிகளை தமிழகஅரசு செய்து தருவதுதான் வாகன பிரச்னைக்கு உண்மையான தீர்வாகும்.
சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச திட்டங்கள் தனியார் சுயநிதிப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதால் மாணவர் உரிமைகளில் பாகுபாடுகள் தோன்றியுள்ளன.
எனவே அனைத்து மாணவர்களுக்கு அரசின் சலுகைகள் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் பெற்றோர்களின் பணச்செலவு குறையும் என தெரிவித்துள்ளார்.
2 comments:
Very good opinion sir.
RTE ACT
PART VI – TEACHERS
16. Acquiring minimum qualification.- (1) The State Government shall
provide adequate teacher education facilities to ensure that all teachers in
schools referred to in sub-clauses (i) and (ii) of clause (n) of section 2, who
do not possess the minimum qualifications; as laid down by the academic
authority authorised by the Central Government at the time of
commencement of the Act, to acquire such minimum qualifications within a
period of five years from the commencement of the Act.
Post a Comment