பள்ளிகளில், ஜாதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக, வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் ஆய்வுப் பணி நடந்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. பள்ளி நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, சான்று கோரும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடுவதில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின விண்ணப்பங்களை, உரிய காலத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்ப முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையொட்டி, நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மாணவர்கள் குறிப்பிட்ட சில சான்றிதழ்களை ஏற்கனவே வைத்திருப்பதாக தெரிய வந்தது.
இதனால், சான்று கோரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு அறிவித்த படி, கடந்த 31ம் தேதிக்குள், பள்ளி நிர்வாகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை முழுமையாக அனுப்பி விட்டதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். இதற்கான பணிகள் நடந்து வருவதாக சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment