பிளஸ்- 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதற்கு முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கி பேசும் போது, கல்வி உதவித்தொகையை பெறும் மாணவர்களாகிய நீங்கள் மென்மேலும் படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். அப்படி வரும்போது மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உதவித்தொகை சங்கிலி தொடர் போல தொடர்ந்து செல்ல வேண்டும் என்றார்.
விழாவில், பிளஸ்- 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று என்ஜினீயரிங் மற்றும் கால்நடை படிப்புக்கு செல்லும் 17 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், டிப்ளமோ மற்றும் பட்டபடிப்பு படிக்க செல்லும் மாணவர்கள் 8 பேருக்கு தலா ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment