Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 15, 2012

    கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதை தவிர்க்க கோரிக்கை.

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் மதிப்புமிகு தேவராஜன் அவர்களை சந்தித்து 2012-2013ம் கல்வியாண்டு முப்பருவமுறைக்கான பயிற்சிகளை கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்கும் படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    முப்பருவக் கல்விமுறை அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுவதால், ஆசிரியர்களை தயார்படுத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவிருககிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது.

    பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர். தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


    இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க
    • பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும்
    • பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும்
    • பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும்
    • டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும் கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் 
    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் கூறியதாவது:
    • கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது. 
    • அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது. 
    • முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும். 
    • தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது. 
    • வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம் 
    • பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும் 
    • அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் 
    • அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

    No comments: