எளிய சோதனைகள் மூலம் வாழ்வியல் அறிவியலை பள்ளிகளில் கற்பிக்கும் நிகழ்ச்சி, அதிக கூச்சலால் மனநிலை பாதிக்கும் அறிவியலார் மாணவர்களுக்கு அறிவுரை. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில், சென்னை பரிக்ஷன் அறக்கட்டளை சார்பில் எளிய பரிசோதனை முறையில் வாழ்வியல் அறிவியலை பள்ளிகளில் கற்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவி சுமித்ரா தலைமை வகித்தார். சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார். அறக்கட்டளை திட்ட இயக்குநர் ,அறிவியலார் அறிவரசன் மாணவர்களுக்கு எளிய முறையில் பரிசோதனை மூலம் விளக்கமளித்தார்.சுமார் 800க்கும் அதிகமான வேதியல் பொருள்களையும் ,கூம்பு குடுவைகளையும் ,சோதனைகளுக்கு தேவையான மற்ற பொருள்களையும் தனது பையில் வைத்து கொண்டு அதனை தமிழ்நாடு முழுவதும் ஊர் , ஊராக எடுத்து சென்று 1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் இலவசமாக செய்து காண்பிக்கின்றார். அறிவியலார் அறிவரசன் பேசுகையில், அதிக கூச்சல் போட்டால் , மனநிலை பாதிக்கபடும், எனவே வகுப்பில் கூச்சல் போடக்கூடாது.
காற்றுக்கு எடை உண்டு. பக்கத்தில் இருப்பவர்களோடு அமைதியாக பேச வேண்டும். அதிக சத்தம் போட்டு பேசக்கூடாது. கூச்சல் போடக்கூடாது. இதற்கு டெசிபிள் முறையில் அளவீடு கணக்கிடப்படுகிறது. 80 டெசிபிளுக்கு மேல் போனால்,ஒரு வருடத்தில் மனநிலை பாதிக்கும். செவிப்பறையும் பாதிக்கும். வகுப்புகள் உட்பட மொத்தத்தில் கூச்சல் போடுவதை தவிருங்கள். கேரளாவில் மின்சாரம் இன்றி சைக்கிள் பெடல் செய்வது காலால் மிதித்து செயல்படும் வாஷிங் மெசினை ஒரு மாணவி கண்டுபிடித்துள்ளார். அதே போல், காது கேளாதோருக்கு பற்கள் மூலம் ஓசைகளை,பாடல்களை கேட்டு ரசிக்கும் புதிய கருவியை மாணவர்களிடம் அறிமுகபடுத்தினார்.ஒத்ததிர்வு ,புல்லாங்குழல் இசை,தனிமம்,சேர்மம் ஆகியவற்றின் பண்புகள்,நிறம்காட்டிகள் ,அமிலம்,காரம் இவற்றின் பண்புகள் என பல தகவல்களை மாணவர்களோடு மாணவராக ஒன்றி செய்த செயல்பாடுகள் மாணவர்களிடையே ஆர்வத்தையும்,சந்தோசத்தையும் ஏற்படுத்தியது. கல்வி கற்பதோடு, அன்றாட வாழ்க்கையில் நிறைய செயல்களை சிறு சிறு செயல்முறைகளோடு செய்து பார்த்தால் மனதில் பதிவதோடு உயர்கல்விக்கு கற்பதற்கு எளிமையாக உதவியாக இருப்பதோடு புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வழிவகுக்கும்,என்றார்.
ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment