மருத்துவ மாணவர்களுக்கு நடைபெற இருந்த, 2015ம் ஆண்டுக்கான அகில இந்திய மருத்துவ தேர்வின் வினாத்தாள்கள் சில மாநிலங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தேர்வை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மறு தேர்வை நடத்த போதுமான காலஅவகாசம் வேண்டும் என சி.பி.எஸ்.இ. தரப்பில் கோர்ட்டில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு மறுதேர்வை நடத்த போர்டு கமிட்டிக்கு 4 வாரகால அவகாசமும் அளித்து இருந்தது.
தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ மாணவர் தேர்வு 25 தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. தேர்வு போர்டு கமிட்டி நேற்று அறிவித்தது. அன்று காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரை நாடு முழுவதும் 1,000 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு ஏற்கனவே தகுதிபெற்றிருந்தவர்களுக்கு மட்டும் நடைபெறும்.
இதுபற்றி தேர்வு எழுதுபவர்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் முறையாக தகவல் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள தேர்வு கமிட்டியின் வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தேர்வு கமிட்டி அறிவித்து உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் ஆகஸ்டு 17-ந்தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment