Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 14, 2015

    பி.எப்., கணக்கு விவரங்கள் இனி தமிழிலும் அறியலாம்

    தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தாம்பரம் பி.எப்., மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

    பி.எப்., சந்தாதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிரந்தர அடையாள எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, 'ஆன் - லைன்' மூலம், பி.எப்., கணக்கு விவரங்கள் மற்றும் பிற வசதிகளை பெற முடியும். சந்தாதாரர்கள், EPFOHO UAN TAM என, குறிப்பிட்டு, 77382 99899 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அவர்களின் பி.எப்., கணக்கு பற்றிய தகவல்கள், தமிழில், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். செயலற்ற கணக்குகளை முடிவுக்கு கொண்டு வரவும், பழைய கணக்கில் உள்ள தொகையை, புதிய கணக்கிற்கு மாற்றவும், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பணிக்கு செல்வோருக்கு, மையப்படுத்திய உறுப்பினர் சான்று வழங்கப்படும்.


    'ஆன் - லைன்' மூலம், சந்தாதாரர் கணக்குகளை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் கணக்குகள், 'ஆன் - லைனில்' பதிவேற்றம் செய்யப்படுகிறது; 2014 - 15ல், 14.5 கோடி உறுப்பினர் கணக்குகள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும், 'ஆன் - லைன்' மூலம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

    No comments: