இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான பதிவு மூப்பு விவரங்களை சரி பார்த்துக்கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெ.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான பட்டியல் வேலைவாய்ப்புத் துறை மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிக்கு, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு டிப்ளமோ படிப்பின் தொழிற்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2015 ஆம் தேதி படி ஓசி பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும், பிசி,எம்பிசி,பிசிஎம் பிரிவினருக்கு 37 வயதிற்குள்ளும், எஸ்சி,எஸ்எஸ்டி பிரிவினருக்கு 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதற்கு அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பு தளர்வு உண்டு. இதற்கான பதிவு மூப்பு தேதி விவரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகுதி உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களது பரிந்துரை விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம். புதிவு மூப்பிற்கு பின்னர் உள்ள மனுதாரர்களின் விசாரணைகள் மற்றும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment