Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 16, 2015

    முயன்றால் முடியும்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன்

    அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு, கட்டணமில்லா தனி வகுப்புகள் (டியூஷன்) எடுப்பதையே லட்சியமாக கொண்டு செயல்படுகிறார் ஒரு பெண்மணி. லட்சக்கணக்கில் கட்டணம் கட்டி, பிரபல தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து, புரியாத பாடமாக கருதும் ஒவ்வொரு பாடத்திற்கும், தனி வகுப்பு களுக்கு செல்லும் மாணவர்கள் ஒருபக்கம் என்றால், அரசு பள்ளிகளில் சேர்ந்து, கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில், படிக்கும் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இன்னொரு பக்கம். 


    பெரிய விஷயம்:இந்த நிலையில், அவர்கள் தனி வகுப்புகளுக்கு (டியூஷன்) கட்டணம் கட்டி செல்வது என்பது சாத்தியமா?'சாத்தியப்படுத்துகிறேன்' என, களம் இறங்கியிருக்கிறார், சென்னை ஆதம்பாக்கத்தில் வசிக்கும் வளர்மதி, 33.அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டும், கட்டணமில்லாத தனி வகுப்புகள் எடுப்பதே தன் லட்சியம் என, செயல்பட்டு வருகிறார், வளர்மதி. 


    இதுகுறித்து அவர் கூறியதாவது:என் கணவர் கணேஷ், 41; கார்கோ நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்களுக்கு தினேஷ், ஹரிஷ் என, இரண்டு குழந்தைகள். நான் ஒரு தனியார் நிறுவனத்தில், மனிதவள துறை அதிகாரியாக பணிபுரிந்தேன். பிள்ளை களை கவனிப்பதற்காக, பணியில் இருந்து நின்று விட்டேன். நான் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து, அரசு உதவித்தொகை பெற்றவள். நான் படிக்கும்போது, வெற்றி பெற்றாலே பெரிய விஷயம்.

    தற்போது, அதிக மதிப்பெண் பெற்றால் தான் கவுரவமாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல், பல்வேறு சூழல்களுக்கு மத்தியில், மாணவ, மாணவியர் தங்களை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.பொறுப்பு இல்லாத கணவனால், வீட்டு வேலை செய்யும் பல பெண்களை பார்த்திருக்கிறேன். அவர்களது, பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கும் சூழலில் தான் உள்ளனர். பணம் கட்டி தனி வகுப்புகள் செல்லும் மாணவர்களுடன், அவர்களது பிள்ளைகள் போட்டி போட முடியாது.

    உறுதுணையாக...:

    நான் அரசிடம் இருந்து படிக்க பண உதவி பெற்றேன். அதை திருப்பி செலுத்துவது எப்படி என்ற கேள்வி, பல ஆண்டுகளாக என் மனதில் ஓடியது.கணவர், பிள்ளைகளை கவனிப்பதோடு சேர்த்து, அரசு பள்ளியில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இலவசமாக தனி வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, இந்த மாதம் முதல் துவங்கி உள்ளேன். 
    ஒரு சில மாணவர்கள் வந்துள்ளனர். மன நிறைவாக உள்ளது. எனது இந்த பணிக்கு, என் கணவர், பிள்ளைகள் உறுதுணையாக உள்ளனர். நான் எடுக்கும் தனி வகுப்பு மூலம், ஒரு மாணவன், ஒரு மதிப்பெண் அதிகமாக பெற்றாலும், நான் அரசிடம் பெற்ற உதவியில், கடுகளவு திருப்பி செலுத்திய உணர்வை பெறுவேன்.இவ்வாறு, வளர்மதி கூறினார்.
    தொடர்புக்கு: 94452 64145

    No comments: