Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 16, 2015

    உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர்

    தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (15.7.2015) தலைமைச் செயலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 1006 உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


    அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தெரிவுப் பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.  இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் 1006 நபர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்ய  தெரிவு செய்துள்ளது. 

    அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட  1006  நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா இன்று 5 நபர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன்,  தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    No comments: