'ஆராய்ச்சி படிப்புகளில், விதிகளை மீறி செயல்படக்கூடாது' என, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு, வழிகாட்டி பேராசிரியரை நியமித்த பின், அவர் மூலமாகவே, மாணவர் ஆராய்ச்சி செய்து, ஆய்வறிக்கை சமர்ப்பித்து, பட்டம் பெற முடியும்.
வழிகாட்டி நியமனம் குறித்து, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, வழிகாட்டி நியமனம் செய்வதில் முறைகேடுநிகழ்வதாக தகவல்கள் வந்துள்ளன.சில பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள், தங்கள் நிறுவனங்களில் பணியாற்றாத பேராசிரியர்களை பகுதி நேரமாக வரவழைத்து, ஆராய்ச்சி மாணவர்களுக்கு அவர்களை வழிகாட்டியாக நியமித்து, பட்டம் வழங்குவதாக தெரிய வந்துள்ளது. இது, விதிகளை மீறும் செயல்.எந்தவொரு பல்கலையும், கல்லுாரியும், முழு நேர ஊழியராக நியமிக்காத பேராசிரியர் மூலம் பிஎச்.டி., அல்லது எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு நடத்த முடியாது. இதை மீறினால், சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment