Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 13, 2015

    அரசு பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு

    கல்வியாண்டு துவக்கத்திலேயே, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களை விட, தினமும் மூன்று மணி நேரம் கூடுதலாகவும், சனிக்கிழமை முழுவதும், பள்ளியில் செலவிட வேண்டியுள்ளதால், ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


    முழு வேலை நேரம்

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, காலாண்டு தேர்வு முடிந்ததும் துவங்கிய கெடுபிடி, இந்த கல்வியாண்டில், வகுப்பு துவங்கியதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.காலை, 8:15 மணியிலிருந்தும், மாலை, 4 மணியிலிருந்தும் இருவேளை சிறப்பு வகுப்புகளும், சனிக்கிழமை முழு வேலை நேரமாக சிறப்பு வகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
    பிளஸ் 2 மற்றும், ௧௦ம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இந்த ஆசிரியர்கள் காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு வந்து, மாலை, 6:00 மணிக்கு பின்பே வீடுதிரும்பும் நிலை உள்ளது. மற்ற வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள், காலை, 9:௦௦ மணிக்கு வந்து, மாலை, 4:௦௦ மணிக்கு வீடு திரும்பும் நிலையில், ஆசிரியர்களிடையே காட்டப்படும் இந்த பாகுபாடு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பொதுவாக, அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்த பின், தேர்ச்சி விகிதம் கூட்டுவதற்காக, ஆசிரியர்களே விரும்பி, சிறப்பு வகுப்புகளை நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது, கல்வியாண்டின் துவக்கதிலேயே சிறப்பு வகுப்புகளை நடத்த கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர்.பொதுவாக, பள்ளியில் சீனியர் ஆசிரியர்களே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்துவது வழக்கம். அவர்களுக்கு அதிக வேலைநேரம் ஒதுக்கிவிட்டு, மற்ற பாட ஆசிரியர்களுக்கு, குறைந்த நேரம் மற்றும் சனிக்கிழமை விடுமுறை உள்ளிட்டவை யும் கிடைக்கிறது.இதனால், பல ஆசிரியர்கள், ௧௦ம் வகுப்புக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, கீழ் வகுப்புகளுக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகின்றனர்.பள்ளி வேலை நேரத்தில், நலத்திட்டம் வழங்குதல், புள்ளி விவரம் சேகரித்தல் என, அலுவலக பணிகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தினமும் சிறப்பு வகுப்பு கள் என்பதை, பெற்றோரையும், பொதுமக்களையும் ஏமாற்றும் செயலாகவே அமைந்துள்ளது. 

    பலன் தரும்

    பெரும்பாலான ஆசிரி யர்கள், விருப்பமின்றி கடமைக்கு, நடத்துகின்றனர். இதனால், பெரிய அளவில், எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. அதிக நேரம் வகுப்புகளால், மாணவ, மாணவியரும் களைத்து போகின்றனர். கட்டாய சிறப்பு வகுப்புகளைவிடவும், பள்ளி வேலைநேரத்தில் முழுமையாக பாடம் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது நல்ல பலனை தரும் என்பதை, கல்வி நிர்வாகம் உணர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    2 comments:

    Unknown said...

    இந்த கல்வி துறையில் அதிகாரிகள் எல்லாம் தான்தாம் கடவுள் என்று நினைக்கிறார்கள் ஊருக்கு இளைத்தவர்கள் பிள்ளையார்கோவில் ஆண்டி என்பது போல ஆசிரியர்கள்தான் கிடைத்தார்கள். ஒரு மாணவனுடைய மன நலம் பற்றி இவர்களுக்கு கவலை கிடையாது.இவர்களுக்கு தெரிந்தது ஆசிரியர்களை மிரட்டுவது,மேல் அதிகாரிகளுக்கு கூஜா தூக்குவது இவர்களெல்லாம் ஆசிரியர்களாக பணியாற்றிய காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை மறந்துவிட்டார்கள்

    Samuel Zelotes said...

    Well said sundararajan sir.